பரிஸ் : தீவிபத்தில் ஒருவர் பலி!!

29 சித்திரை 2024 திங்கள் 14:09 | பார்வைகள் : 6080
பரிசில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற தீ விபத்தொன்றில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் 115, rue Saint-Charles எனும் முகவரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று ஏப்ரல் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் தீ பரவியது. அருகில் வசிக்கும் பலர் தீயணைப்பு படையினருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர்கள் துரிதமாக சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக தீ வேகமாக பரவி, பெரும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. தீயணைப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஒருமணிநேரத்துக்கும் மேலான போராட்டத்தை அடுத்து, தீ அணைக்கப்பட்டது.
அதன்முடிவில் நாற்பது வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.