Essonne : ஆயுததாரி மீது ஜொந்தாமினர் துப்பாக்கிச்சூடு!!
29 சித்திரை 2024 திங்கள் 14:32 | பார்வைகள் : 15865
ஜொந்தாம் வீரர்களை தாக்க முற்பட்ட ஆயுதராரி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். Limours (Essonne) நகரில் இச்சம்பவம் ஏப்ரல் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய ஒருவர் கைகளில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு குடும்ப அங்கத்தவர்களை அச்சுறுத்துவதாக ஜொந்தாமினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குறித்த நபர் மனநலம் குன்றியவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர், திடீரென ஜொந்தாம் வீரர்களை தாக்க முற்பட்டுள்ளார். அவர் ஆயுதத்தை கீழிறக்க மறுத்துள்ளார். அதையடுத்து, ஜொந்தாமினர் அவரின் கால்களில் சுட்டு வீழ்த்தி அவரைக் கைது செய்தனர்.


























Bons Plans
Annuaire
Scan