வவுனியாவில் குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலி
17 ஆவணி 2023 வியாழன் 14:10 | பார்வைகள் : 10442
வவுனியா பல்கலைக்கழக மைதான வளாகத்தில் உள்ள நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் பலியாகினர்.
குறித்த மைதானத்தில் இன்று இடம்பெற்ற கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மாணவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்தனர்.
சடலங்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan