யாரும் செல்லாத நிலவின் இருண்ட பகுதி; சீனாவின் திட்டம் வெற்றிப்பெறுமா?
30 சித்திரை 2024 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 1160
நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோ விண்கலத்தை அனுப்ப சீனா (China) தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
நிலவில் இதுவரை யாரும் செல்லாத இடத்திற்கு அதாவது நிலவின் இருண்ட பகுதிக்கு சீனாவின் சாங்'இ-6 (Chang'e-6) என்ற விண்கலமானது அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையை முதன்முறையாக சீனா முன்னெடுத்துள்ளது. குறித்த பணியானது, சீனக் குழுவினர் தரையிறங்குவதையும், சந்திரனின் தென் துருவத்தில் ஒரு தளத்தை நிறுவுவதையும் இலக்காகக் கொண்ட மூன்று சவாலான பணிகளுக்கு முன்னோடியாக உள்ளது.
இந்த வாரம், மண் மற்றும் பாறைகளை சேகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் தொலைதூரப் பகுதிக்கு சாங்'இ-6 ஐ அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த பயணமானது 53 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பூமியுடன் தொடர்பு கொள்வதற்காக, சந்திரனைச் சுற்றி வரும் ரிலே செயற்கைக்கோளை சாங்'இ-6 நம்பியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.