Paristamil Navigation Paristamil advert login

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., Speaking Practice அம்சத்துடன் Google உதவும்

இப்போது நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேசலாம்., Speaking Practice அம்சத்துடன் Google உதவும்

30 சித்திரை 2024 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 1643


சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? அதற்காக ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகளில் சேரவோ அல்லது பணம் செலுத்தும் Appகளை பயன்படுத்தவோ தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனில் Google-ஐ திறந்தால் போதும்.

பயனர்களின் ஆங்கிலத்தில் பேசும் திறனை மேம்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் 'Speaking Practice' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துகிறது.

AI உதவியுடன் இது நமக்கு ஒரு கற்றல் பயிற்சியாக இருக்கும். இதன் மூலம், அன்றாட சூழ்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய புதிய வார்த்தைகளை நாம் கற்றுக்கொள்ள முடியும் என்று தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.Google’s Speaking practice

தற்போது, ​​இந்தியா, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் Google Labs-ல் 'Speaking practice' வசதி உள்ளது.

அமெரிக்க ஓன்லைன் செய்தி தளமான TechCrunch வழங்கிய தகவலின்படி, கூகுளின் 'Speaking practice' பயிற்சி பயனரிடம் கேள்வி கேட்பதன் மூலம் தொடங்குகிறது. குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பயனர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். இந்த அம்சத்தின் முக்கிய நோக்கம் பயனர்கள் ஆங்கிலம் சிறப்பாக பேச உதவுவதாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்