தெற்கு காசா பகுதியின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் - குழந்தைகள் உள்பட 22 பேர் பலி
30 சித்திரை 2024 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 3418
இஸ்ரேலானது காசாவின் அனைத்து பகுதியையும் முற்றுகையிட்டு வருகின்றது.
ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்று சூளுரைத்துள்ளது.
தெற்கு காசா பகுதியின் ரஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆறு பெண்களும் ஐந்து குழந்தைகளும் அடங்குவர். பிறந்த ஐந்து நாட்களில் ஒரு குழந்தை இறந்தது.
எகிப்து எல்லையில் உள்ள ரஃபா ஹமாஸின் கோட்டை என்று இஸ்ரேல் கூறுகிறது. இதனையடுத்து ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ரஃபாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர். காஸா பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபாவிற்கு இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர்.
மனிதாபிமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழித் தாக்குதலை நடத்த வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவிற்கு அதிக உதவிகளை வழங்க இஸ்ரேல் வசதி செய்ய வேண்டும். எவ்வாறாயினும், மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க இருதரப்பும் போர் நிறுத்தம் செய்வது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.