Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

30 சித்திரை 2024 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 2340


கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில் அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர்.

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

கொவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, மாணவர்கள் கூடுதலாக சில மணி நேரம் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது. 

அதாவது, கல்வி கற்கும் மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

ஆனால், அந்த விதி, இன்றுடன், அதாவது, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. 

இனி, கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு.

கனடாவுக்கு சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் நோக்கமே, அவர்களுக்கு கல்வி அளிப்பதற்காகத்தான். 

ஆனால், அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிப்பதால், கனடாவுக்கு வரும்போதே, கல்வி கற்கும் நோக்கத்துடன் வராமல், பணி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர்.

இந்த, வாரத்துக்கு 20 மணித்தியாலம் வேலை செய்யும் அனுமதி, செப்டம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும். 

செப்டம்பருக்குப் பிறகு அதை 24 மணி நேரமாக அரசு அதிகரிக்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்