Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர்: பிரதமர் மோடி

பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர்: பிரதமர் மோடி

30 சித்திரை 2024 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 4543


10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி மற்றும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர் '' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மாதா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஆசி கேட்டு வந்துள்ளேன். மக்களின் அன்பே என்னை வலிமையாக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உங்களுக்கு சேவை செய்ய ஒவ்வொரு நொடியையும் செலவு செய்தேன்.
காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு குறித்து மட்டுமே பேசினர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியையும், 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தையும் மக்கள் பார்க்கின்றனர். மத்தியில் வலிமையான ஆட்சி அமையும் போது, எதிர்காலம் குறித்து அரசு கவனம் செலுத்தும். 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை, 10 ஆண்டுகளில் நாங்கள் சாதித்து உள்ளோம்.
ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் விமானத்துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ளோம். உள்கட்டமைப்புக்கு காங்கிரஸ் 10 ஆண்டுகளில் முதலீடு செய்ததை நாங்கள் ஒரே ஆண்டில் செய்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்