Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் புட்டு

ஓட்ஸ் புட்டு

30 சித்திரை 2024 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 1081


புட்டு உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. அதுபோல் ஓட்ஸ் கூட உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே அரிசி மாவுக்குப் பதிலாக ஓட்ஸைப் பயன்படுத்தி ஆரோக்கியமான புட்டு 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்

துருவிய தேங்காய் - தேவைக்கேற்ப

வெல்லம் - இனிப்பிற்கேற்ப

முந்திரி - 5 - 7

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

நெய் - 2 ஸ்பூன்

தண்ணீர் - 3 ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு முறை அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளுங்கள்.

தற்போது இதை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கிடையே அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கட்டியாக பாகு காய்ச்சிக்கொள்ளுங்கள்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் உடைத்த முந்திரியை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் வேக வைத்த ஓட்ஸ் மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ரெடி செய்த வெல்ல பாகை ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும்.

இறுதியாக துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் ஆரோக்கியமான ஓட்ஸ் புட்டு ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்