இடியுடன் கூடிய கடும் மழை! - இல் து பிரான்ஸ் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

1 வைகாசி 2024 புதன் 07:09 | பார்வைகள் : 10197
இன்று புதன்கிழமை மாலை இல் து பிரான்ஸ் உள்ளிட்ட பிரான்சின் வடக்குப் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை அவதானிப்பு மையம் (Météo France) அறிவித்துள்ளது.
Marne, Yonne மற்றும் Aube ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மாலை 5 மணி முதலும், Paris, Seine-Saint-Denis, Seine-et-Marne, Val-de-Marne, Essonne, Val-d'Oise , Yvelines மற்றும் Hauts-de-Seine ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 7 மணி முதலும் Oise, Somme மற்றும் Aisne ஆகிய மாவட்டங்களுக்கு இரவு 9 மணி முதலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய கடும் மழை பெய்யும் எனவும், புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு, மேற்குறித்த அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1