Paristamil Navigation Paristamil advert login

மருத்துவத் துறை மாணவன் தன் பணியைத் தொடர நீதிமன்றம் அனுமதி. எதிராக 22,000 கையெழுத்துக்கள்.

மருத்துவத் துறை மாணவன் தன் பணியைத் தொடர நீதிமன்றம் அனுமதி. எதிராக 22,000 கையெழுத்துக்கள்.

1 வைகாசி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 2701


Limoges உள்ள Haute-Vienne பகுதியில் புற்றுநோயியல் துறையில் தன் பட்டப்படிப்பை முடித்து பயிற்சியை ஆரம்பிக்க இருந்த மாணவன் ஒருவருக்கு பல்கலைக்கழகம் இடைக்கால தடையை விதித்திருந்தது, குறித்த தடைக்கு எதிராக Limoges நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவன் தன் பயிற்சியை பிரான்சிலோ அல்லது வெளிநாட்டிலோ தொடரலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நீதிமன்றத்தின் அனுமதியை ஏற்க மறுத்து பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஒரு கையெழுத்து போராட்டத்தை இணைய வழியில் கடந்த 30/04 செவ்வாய் கிழமை நடத்தியது. இதில் 22,000 கையெழுத்துக்கள் பதிவாகியுள்ளது. "நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் ஆனாலும் குறித்த மாணவன் பயிற்சியை தொடங்குவது ஆபத்தானது" என மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.

தடையுத்தரவு விதிக்கப்பட்ட 26 வயது நபர், கடந்த 2017 மற்றும் 2020 காலப்பகுதியில் பல்கலைக்கழகம் வளாகத்தில் தன் சக மருத்துவ துறை மாணவிகளை பலாத்கார பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்தை இளைத்தவர் என்பதற்காகவே அந்த நபருக்கு பலலைக்கழக நிர்வாகம் தடை உத்தரவை வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்