"அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது" அரச தலைவரிடம் சமர்ப்பிக்க பட்டது அறிக்கை.
1 வைகாசி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 2860
சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வன்முறைகள், மற்றும் பாடசாலை துன்புறுத்தல்கள், மேலும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் சிக்கல்கள், இவற்றை தீர்த்து வைக்கும் நோக்கோடு குழந்தைகளில் இருந்து எவ்வாறாக அடுத்த தலைமுறை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஜனவரி மாதத்தில் அரச தலைவர் Emmanuel Macron அவர்களால் அமைக்கப்பட்ட குழந்தை நல நிபுணர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு தமது விரிவான அறிக்கையை அரசு தலைவரிடம் நேற்று ஒப்படைத்து இருக்கிறது.
இதில் பல்வேறுபட்ட விடயங்கள் அடங்கியிருந்தாலும் சிறப்பாக, 'குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடுதிரை சாதனங்களுக்குள் மூழ்கிச் சீரழிகிறார்கள்' என்பதனை அந்த அறிக்கை முன் வைத்துள்ளது. இதனால் பின்வரும் நடவடிக்கைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று அந்த குழு முன்மொழிந்துள்ளது.
இதில் மூன்று வயதுவரையான குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களைத் தொட்டுப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது, அத்தோடு
சிறுவர்கள் பதினொரு வயதுக்கு முன்னர் ஸ்மார்ட் போன்களைப் பாவிப்பதைத் தடுக்குமாறும்
அரசுக்கு அறிவிறுத்தியுள்ளது.
மேலும் 13 வயதில் ஸ்மார்ட் போன்களை வழங்கலாம் என்றும். ஆனால் அவற்றின் மூலம் சமூக வலை ஊடகங்களை அணுகமுடியாது தடுக்கப்பட வேண்டும் என்றும்.15 வயதுக்குப் பின்னரே சமூக ஊடகங்களின் பாவனையை சிறுவர்கள் அணுகும் முறையினை கையாள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை அரசு சட்டமாக்க வேண்டும் என்றும் ஆனாலும் பெற்றோர்களும் ஒத்துழைப்புடனே இவ்வாறான நடைமுறையை கையாள முடியும் என்றும் அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.