Paristamil Navigation Paristamil advert login

 சுவிஸில் நிரந்தர குடியுரிமை அனுமதி தொடர்பில் வெளியாகிய தகவல்

 சுவிஸில் நிரந்தர குடியுரிமை அனுமதி தொடர்பில் வெளியாகிய தகவல்

1 வைகாசி 2024 புதன் 10:35 | பார்வைகள் : 2008


சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளன.

 அவற்றில், குடியுரிமை பெற சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்வதும் அவசியமா இல்லையா என்பதும் அடங்குமா என்பதைப் பார்க்கலாம்.

சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் முன், நீங்கள் சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாழ்ந்திருக்கவேண்டும் என்பதும் கட்டாயமாகும்.

இந்த விதி, வெளிநாட்டவர்களான, சுவிஸ் குடிமக்களின் கணவர் அல்லது மனைவிக்கும் பொருந்தும். 

அவர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.

தெளிவாகக் கூறினால், சுவிஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்காக உங்களிடம் 'settlement’ C permit என்னும் உரிமம் இருக்கவேண்டும். 

இந்த விதி, ஐரோப்பிய ஒன்றியத்தாருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதோருக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்