Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது - துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

ஒலிம்பிக் போட்டிகளின் போது - துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

1 வைகாசி 2024 புதன் 10:50 | பார்வைகள் : 12117


ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசில் பணியாற்றும் துப்பரவு  பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

CGT மற்றும் CGT FTDNEEA ஆகிய இரண்டு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். மே மாதம் 14, 15, 16, 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளிலும், ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் திகதி வரையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் இடைவிடாத வேலை இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் அவர்கள், ஊக்கத்தொகையாக €1,900 யூரோக்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்