இன்று முதல் - சமூகநலக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
1 வைகாசி 2024 புதன் 14:00 | பார்வைகள் : 5552
சமூகநலக் கொடுப்பனவுகள் (prestations sociales) இன்று முதல் 4.6% சதவீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAH எனும் மாற்றுத்திறனாளி பிள்ளை உள்ள குடும்பத்துக்கு €1,016.05 (+€44.68 யூரோக்கள் அதிகமாக) வழங்கப்பட உள்ளது.
செயற்பாடு கொடுப்பனவுகள் (prime d'activité) €622.63 (+€27.37 யூரோக்கள் அதிகமாக) வழங்கப்பட உள்ளது.
RSA கொடுப்பனவு €27.96 யூரோக்களால் அதிகரித்து
€635.71 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
l'allocation de solidarité spécifique கொடுப்பனவுகள் €25.2 யூரோக்களால் அதிகரித்து €570.30 வழங்கப்பட உள்ளது.
இந்த அதிகரிக்கப்பட்ட தொகை மே மாதம் 6 ஆம் திகதிக்குப் பின்னர் கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.