நெய்மரின் புதிய வரலாறு... சவுதி கிளப் பெருமிதம்...

18 ஆவணி 2023 வெள்ளி 10:13 | பார்வைகள் : 7815
சவுதியின் கிளப் அணியான அல் ஹிலாலில் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் இணைந்துள்ளார்.
பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியில் விளையாடி வந்த பிரேசில் நட்சத்திரம் நெய்மர் அல் ஹிலால் அணிக்காக 90 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் ஆனார்.
இதன்மூலம் PSG உடனான அவரது 6 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்தது.
மேலும் நெய்மரின் சீருடையை அறிமுகப்படுத்தியது அல் ஹிலால் அணி.
2025ஆம் ஆண்டு வரை நெய்மர் அல் ஹிலால் அணியில் விளையாடுவார்.
அல் ஹிலால் சீருடையை அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை நெய்மர் பகிர்ந்தார்.
அதே போல் நெய்மரை வைத்து வரலாற்றை எழுத போகிறோம்.
புதிய வரலாறு நிறைவேற போகிறது என்றும் நெய்மரின் புகைப்படங்கள் மற்றும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வீடியோ ஆகியவற்றையும் அல் ஹிலால் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அல் ஹிலால் அணியில் இணைந்து குறித்து நெய்மர் கூறுகையில், 'நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்.
புதிய லீக்கில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இது புதிய அனுபவம், ஒரு புதிய சவால் மற்றும் வரலாற்றை எழுத உற்சாகமாக இருக்கிறேன்.
நான் சவால்களால் உந்தப்பட்டவன். கண்டிப்பாக இந்த தொடர் மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1