Paristamil Navigation Paristamil advert login

ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்

ஆண்டுக்கு 25 இளம்பெண்கள்: வட கொரிய ஜனாதிபதி தொடர்பில் இளம்பெண் தெரிவித்துள்ள அதிரவைத்துள்ள தகவல்

1 வைகாசி 2024 புதன் 11:37 | பார்வைகள் : 1209


தன்னை மகிழ்விப்பதற்காக, ஆண்டுக்கு 25 இளம்பெண்களை வட கொரிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதாக, அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பொதுவாகவே, சர்வாதிகாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது எளிதில் வெளி உலகத்துக்குத் தெரிவதில்லை.

அந்த நாடுகளிலிருந்து யாராவது தப்பி வேறொரு நாட்டில் தஞ்சம் புகுந்தபின், அவர்கள் தங்கள் நாட்டைக் குறித்த ரகசியங்களைக் கூறும்போதுதான் அந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதே தெரியவருகிறது.

வெளிநாடுகளுக்குச் செல்லும் வட கொரிய நாட்டவர்கள், தங்கள் சம்பளத்தில் ஒரு தொகையை தங்கள் நாட்டுத் தலைவருக்குக் கொடுக்கவேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

தற்போது, அப்பாவிக் குழந்தை போல் முகத்தை வைத்துக்கொள்ளும் வட கொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் இன்னொரு முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார் இளம்பெண் ஒருவர். தப்பிய இளம்பெண்.

வட கொரிய ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து தப்பிய இளம்பெண்னான Yeonmi Park, கிம் ஜான் உன்னுக்காக தன்னை அவரது அதிகாரிகள் தேர்ந்தெடுக்கவந்தபோது, தனது குடும்பப் பின்னணி குறித்து அறிந்ததால் தன்னை விட்டு விட்டுச் சென்றுவிட்டதாக தெரிவிக்கிறார்.

பள்ளிகளுக்குச் செல்லும் இந்த அதிகாரிகள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவிகளைத் தேடுவார்களாம். அழகான மாணவிகள் கண்ணில் பட்டால், முதலில் அவர்கள் யார், அவர்களுடைய குடும்பத்தில் யாராவது தென் கொரியா அல்லது வேறு நாடுகளுடன் தொடர்புடையர்களா என்று பார்த்து, அப்படிப்பட்டவர்களை வேண்டாம் என ஒதுக்கிவிடுவார்களாம். தான் அப்படித்தான் தப்பியதாகத் தெரிவிக்கிறார் Yeonmi.

கிம்முக்காக தெர்ந்தெடுக்கப்படும் பெண்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்படுவார்களாம். ஒரு பிரிவினர் மசாஜ் செய்ய, இன்னொரு பிரிவினர் பாடல் பாட மற்றும் நடனமாட, மூன்றாவது பிரிவினர் கிம் மற்றும் அவரது அதிகாரிகளை உடல் ரீதியாக மகிழ்விக்க.

விடயம் என்னவென்றால், நாடு இருக்கும் நிலையில், தங்கள் பிள்ளைகள் கிம்முக்காக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்குமே என அந்தப் பிள்ளைகளின் பெற்றோரே தங்கள் பிள்ளைகளை அனுப்பிவிடுவதும் உண்டாம்.

மொத்தத்தில், உண்மையான வட கொரியாவைக் குறித்து பலருக்குத் தெரியாது, அது, சிறு பிள்ளைகளை சீரழிக்கும் ஒரு கூட்டத்தினர் வாழும் நாடு என்கிறார் Yeonmi.  


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்