Paristamil Navigation Paristamil advert login

மே தின பேரணியில் வன்முறை! - 12 காவல்துறையினர், ஜொந்தாமினர் காயம்!!

மே தின பேரணியில் வன்முறை! - 12 காவல்துறையினர், ஜொந்தாமினர் காயம்!!

1 வைகாசி 2024 புதன் 16:50 | பார்வைகள் : 6617


இன்று இடம்பெற்ற மே தின பேரணியில் பலத்த வன்முறை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 12 பேர் காயமடைந்தனர்.

மாலை 5.30 மணி அளவில் Place de la Nation கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கால், அங்கு பலத்த வன்முறையில் ஈடுபட்டனர். அதன்போது காவல்துறையினர் மீது கற்கள் வீசி எறியப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 வீரர்கள் காயமடைந்தனர்.

45 பேர் பரிசில் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, நாடு முழுவதும் 121,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், பரிசில் 18,000

 பேர் கலந்துகொண்டதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ஆனால், பரிசில் 50,000 பேரும், நாடு முழுவதும் 210,000 பேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக CGT தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்