Paristamil Navigation Paristamil advert login

யாழில் பொலிஸாரின் தீவிர பாதுகாப்பில் மீட்கப்படும் மனித எச்சங்கள்

யாழில் பொலிஸாரின் தீவிர பாதுகாப்பில் மீட்கப்படும் மனித எச்சங்கள்

2 வைகாசி 2024 வியாழன் 05:19 | பார்வைகள் : 1436


யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எச்சங்கள் மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அண்மையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கிடங்கு வெட்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகிறன.

மேலும் அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்