பிரெஞ்சு சிறைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர் அதிகரிப்பு! - கேள்விக்குறியாகும் சுகாதாரம்!
2 வைகாசி 2024 வியாழன் 08:00 | பார்வைகள் : 2853
பிரெஞ்சு சிறைச்சாலையில் அளவுக்கு அதிகமான கைதிகள் நிரம்பி வழிவதால், சிறைச்சாலை சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 77,450 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2023 ஏப்ரல் 1 ஆம் திகதியோடு ஒப்பிடுகையில் 4,370 கைதிகள் அதிகமாகும். பிரான்சில் 61,570 கைதிகளுக்கான இடம் மாத்திரமே இருக்கும் நிலையொல், மேலதிகமாக 15,880 கைதிகள் (125.8% சதவீதம்) சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
போதுமான இடவசதி இல்லாததால், சிறைக்கையிகள் தரையில் படுத்துறங்குவதாகவும், ஒரே அறையில் நான்கு அல்லது ஐந்து பேர் வரை தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.