பாவக்காய் வறுவல்
2 வைகாசி 2024 வியாழன் 05:33 | பார்வைகள் : 888
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் கசப்பில்லாமல் வெல்லம் போடாமல் சுவையாக பாகற்காய் வறுவலை எப்படி பக்குவமாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்புன்
மிளகாய் தூள் - 2 ஸ்புன்
கடுகு -1/4 ஸ்புன்
கடலை பருப்பு - 1 1/2 ஸ்புன்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயை ஸ்லைசாக நறுக்கி அதை மோரில் உறவைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்துக்கொள்ளவும்.
கடுகு நன்கு வெடித்ததும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
கடலை பருப்பு பொன்னிறமாக மாறியவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
மசாலாவின் பச்சை வாசம் போனவுடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை போட்டு மசாலாவுடன் சேரும் அளவிற்கு நன்றாக வதக்க வேண்டும்.
பாகற்காய் நன்றாக வதங்கிய பிறகு அதில் சிறுதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து சிறது நேரம் மூடிவைத்து வேகவிடவும்.
பாகற்காய் நன்கு வெந்து வதங்கியவுடன் இறுதியாக அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு எண்ணெயில் வதக்குவதால் கசப்பு தன்மை குறைந்து பாகற்காய் சாப்பிட சுவையாக இருக்கும்.அவ்வளவுதான் கசப்பில்லாத சுவையான பாகற்காய் வறுவல் சாப்பிட ரெடி.