இடிமின்னல் தாக்குதலினால் விமான சேவைகள் பாதிப்பு!
2 வைகாசி 2024 வியாழன் 09:00 | பார்வைகள் : 3491
இடி மின்னல் தாக்குதலினால் நேற்று மே 1 ஆம் திகதி விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 15 வரையான விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.
ஓர்லி மற்றும் CDG விமான நிலையங்களை நோக்கி வருகை தந்த விமானங்களே பாதுகாப்பு காரணங்களுக்கான திருப்பி அனுப்பப்பட்டன. இரவு 10 மணி அளவில் மிக கடுமையான மின்னல் தாக்குதல்கள் இல் து பிரான்ஸ் முழுவதும் பதிவான நிலையில், 30 நிமிடங்கள் வரை இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறித்த இரு விமானநிலையங்களுக்கும் வருகை தந்த 15 வரையான விமானங்கள், தரையிறக்கப்படாமல் வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இடியுடன் கூடிய பலத்த மழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பதிவானது. Val-d'Oise மாவட்டத்தை ஊடறுக்கும் A1 நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டு வீதி போக்குவரத்துக்களும் நேற்றைய இரவில் தடைப்பட்டிருந்தன.