Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்ட பிரபல நாடு!

2 வைகாசி 2024 வியாழன் 09:17 | பார்வைகள் : 7658


இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தீவிரமாக நீடித்து வருகின்றது.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காசா மீதான யுத்தம் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் கொலம்பியா அதிபர் பெட்ரோ,

கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிலிருந்து, இஸ்ரேல் - கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்