Paristamil Navigation Paristamil advert login

உணவு தட்டுப்பாட்டை எதிர் நோக்கும் சூடான் மக்கள்! மண், இலைகளை சாப்பிடும் அவலம்

உணவு தட்டுப்பாட்டை எதிர் நோக்கும் சூடான் மக்கள்! மண், இலைகளை சாப்பிடும் அவலம்

2 வைகாசி 2024 வியாழன் 09:37 | பார்வைகள் : 2129


சூடானில் 49 மில்லியன் மக்களில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக தற்போது மக்கள் உயிர்வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது இந்த போர் தற்போது வரை குறைய வில்லை .

உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது.

சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகியுள்ள நிலையில் உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர் மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்