22.8 லட்சம் செயலிகளை Play Store-லிருந்து நீக்கிய Google
2 வைகாசி 2024 வியாழன் 09:54 | பார்வைகள் : 6382
கடந்த ஆண்டு (2023), Google 22.8 லட்சம் செயலிகளை அதன் Play store-ல் இருந்து நீக்கியது.
இந்த தகவலை கூகுள் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் 3,33,000 டெவலப்பர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
இந்த malware apps அனைத்தும் தனியுரிமைக் கொள்கையை மீண்டும் மீண்டும் மீறுவதாகக் கூறப்படுகிறது.
இதில் கூகுளில் வெளியிடப்படுவதற்கு முன்பே 2 லட்சம் apps அழிக்கப்பட்டன.
Background location tracking, message-களை படிக்கும் access, contacts access, microphone, gallery போன்ற பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை இந்த appகள் சேகரிப்பது கண்டறியப்பட்டது.
Google Play store இரண்டு டெவலப்பர்கள் மீது பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஸ்பேம் செயலிகளை டெவலப்பர் மீண்டும் மீண்டும் பதிவேற்றுவதாக google குற்றம் சாட்டியுள்ளது. பொய்யான தகவல் தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, கூகுள் நிறுவனம் விரைவில் புதிய கொள்கையை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் App Defense Alliance-ஐ (ADA) அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக Meta நிறுவனத்துடன் Microsoft ஒப்பந்தம் செய்துள்ளது. இது செயலி பாதுகாப்புக்காக வேலை செய்யும்.
ப்ளே ஸ்டோரைத் தவிர வேறு எந்த ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளுக்கும் அதன் கொள்கை பொருந்தும் என்று கூகுள் கூறியது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan