தரைவழி இராணுவம் நுழையும்! - இரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரித்த மக்ரோன்!!
2 வைகாசி 2024 வியாழன் 13:16 | பார்வைகள் : 4846
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், Nato சார்பு நாடுகளின் இராணுவத்தை உக்ரேனின் எல்லைக்கு அனுப்புவது தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
மேற்கத்திய இராணுவத்தை இரஷ்யாவுக்கு எதிராக களமிறக்க வேண்டிய கட்டாயத்தை இரஷ்யா ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி மக்ரோன், யுத்த முனையின் முன்பக்கத்தை உடைக்க தயாராக இருப்பதாகவும், கீவ் (உக்ரேன் தலைநகரம்) கோரினா எந்நேரமும் தரைவழி இராணுவம் உள்நுழையும் எனவும் ஜனாதிபதி இன்று மே 2 ஆம் திகதி குறிப்பிட்டார்.
'பல ஐரோப்பிய நாடுகள், அதேபோல் அமெரிக்காவும் இந்த விடயத்தில் இடைவெளியை பேணுகிறது. ஆனால் இரஷ்யா எல்லை மீறினால் கள முனையில் அவர்களைக் காணலாம்!' எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.