டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
18 ஆவணி 2023 வெள்ளி 10:45 | பார்வைகள் : 4235
நேற்றுடன் ஒப்பிடும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (17) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 78 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (17) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 87 சதமாக காணப்பட்டது.