Caf கொடுப்பனவுகள் தாமதமாகலாம்..!!
2 வைகாசி 2024 வியாழன் 16:06 | பார்வைகள் : 4925
Caf (Caisse d'allocations familiales) என அழைக்கப்படும் சமூகநலக் கொடுப்பனவுகள் இம்மாதம் தாமதத்தைச் சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்தின் 5 ஆம் திகதி கொடுப்பனவுகளை பெறுபவர்கள் இம்முறை இரண்டில் இருந்து மூன்று நாட்கள் வரை தாதத்தை பெற வாய்ப்புள்ளதாகவும், மே மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மறுநாள் 6 ஆம் திகதி திங்கட்கிழமையே கொடுப்பனவுகள் பட்டுவாடா செய்யப்படும் எனவும், இதனால் சிலருக்கு திங்கட்கிழமையே கிடைக்கும் எனவும், சிலருக்கு மே 8 அம் திகதி புதன்கிழமை வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு உதவித்தொகை பெறுபவர்களுக்கு €11.7 மில்லியன் யூரோக்களும், RSA கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு €7.6 மில்லியன் யூரோக்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் AAH கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு €5.9 மில்லியன் யூரோக்களும் சமூகநலக்கொடுப்பனவுகளாக வழங்கப்பட உள்ளது.