ஒருநாள் வேலை நிறுத்தம்! - தொடருந்து போக்குவரத்து பாதிப்பு!!
2 வைகாசி 2024 வியாழன் 17:18 | பார்வைகள் : 5139
தொடருந்து ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளனர்.
இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும், Transilien மற்றும் ட்ராம் சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன. (போக்குவரத்து பாதிப்பு தொடர்பான துல்லியமான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்)
’ஜூலை மாதத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை விட, மே மாதத்திலேயேயே இணக்கப்பாட்டுக்கு வருவது சிறந்தது. ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் அனைத்து பிரிவினரும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள தயாராகியுள்ளனர். ஆனால் தொடருந்து ஊழியர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்க தலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.