கனடாவில் உடல் எடை குறைப்பு மருந்துக்கு அனுமதி

3 வைகாசி 2024 வெள்ளி 08:27 | பார்வைகள் : 7642
கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடிய உடற்பருமண் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த உடல் எடை குறைப்பு மருந்து வகை கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய் நிலைமைகளை எதிர்நோக்கும் உடல் எடை கூடியவர்களுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், உடலை அழகு படுத்தும் நோக்கிற்காக இந்த மருந்து பயன்படுத்தப்படாது என மருத்துவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
மித மிஞ்சிய அளவில் எடை கூடியவர்களின் எடையை குறைப்பதற்கு வெகோவே (Wegovy) என்ற மருந்து வகை இவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளது.
உண்மையான மருத்துவ காரணங்களுக்காக மட்டும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளதாக டொக்டர் சஞ்சீவ் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.