Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோ இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

ஒன்றாரியோ இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி

3 வைகாசி 2024 வெள்ளி 08:30 | பார்வைகள் : 2510


ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் ஆளும் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

மிஸ்ஸசாகாவிற்கு மேற்கில் அமைந்துள்ள மில்டன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஸீ ஹமீட் 2400 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.

லிபரல் கட்சியின் வேட்பாளர் காலென் நாடியோவை விடவும் ஒன்பது வீத வாக்குகளை ஹாமீட் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தின் மற்றுமொரு தொகுதியான லாம்டோன் கென்ட் மிடில்செக்ஸ் தொகுதியிலும் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் ஸ்டீவ் பின்சொன்னெலெட் வெற்றியீட்டியுள்ளார்.

57 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அவர் இடைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும் இரண்டு சிறந்த வேட்பாளர்கள் தமக்கு கிடைத்ததாகவும் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்