வீதி விதிகளை மீறுவோருக்கு குற்றப்பணம்! - 2 பில்லியன் யூரோக்களை கடந்தது..
3 வைகாசி 2024 வெள்ளி 08:45 | பார்வைகள் : 5259
சென்ற 2023 ஆம் ஆண்டில் மட்டும், வீதி விதிகளை மீறியோருக்கு எதிராக இரண்டு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
அதிவேகமாக பயணித்தல், இடுப்பு பட்டி அணியாம பயணித்தல், தொலைபேசியில் உரையாடிக்கொண்டு பயணித்த போன்ற குற்றச்செயல்கள் முந்தைய ஆண்டுகளை விட, சென்ற 2023 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. மொத்தமாக €2.076 பில்லியன் யூரோக்கள் குற்றப்பணமாக சென்ற ஆண்டு அறவிடப்பட்டுள்ளது.
இந்த தொகையானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% சதவீதம் அதிகமாகும்.
அதேவேளை, வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் கருவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 4,530 ரேடார் கருவிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் 4,661 கருவிகள் சேவையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.