Paristamil Navigation Paristamil advert login

20 வயதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அகால மரணம்

20 வயதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அகால மரணம்

3 வைகாசி 2024 வெள்ளி 08:43 | பார்வைகள் : 3593


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Worcestershire-யை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜோஷ் பேக்கர் (20), அவரது குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.

அவரது நண்பர் தொலைபேசியில் அழைத்து பதில் அளிக்காததால், நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது தான் அவர் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

கவுண்டி போட்டிகளில் விளையாடி வந்த ஜோஷ் பேக்கர் (Josh Baker), U19 அளவில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 

2022யில் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு, கடந்த ஆண்டு 3 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் Worcestershire கிளப் அணி வெளியிட்ட அறிக்கையில், ''20 வயதுடைய ஜோஷ் பேக்கரின் அகால மரணத்தை அறிவிப்பதில் Worcestershire கவுண்டி கிரிக்கெட் கிளப் மனம் உடைந்துவிட்டது.

இந்த கடினமான நேரத்தில், கிளப் ஜோஷின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு ஆதரவாக அர்ப்பணித்துள்ளது. அவரது நினைவைப் போற்ற உறுதிபூண்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது.     
 

வர்த்தக‌ விளம்பரங்கள்