Paristamil Navigation Paristamil advert login

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவிலிருந்து வந்தடைந்த Laser செய்தி

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவிலிருந்து வந்தடைந்த Laser செய்தி

3 வைகாசி 2024 வெள்ளி 08:55 | பார்வைகள் : 1267


சுமார் 140 மில்லியன் மைல் (14 கோடி) தொலைவில் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்திற்கு லேசர் சிக்னல் வந்தடைந்துள்ளது.

நாசா அனுப்பிய Psyche விண்கலத்தில் (spacecraft) இருந்து லேசர் சிக்னல் பெறப்பட்டது.

நாசா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சைக் 16 (Psyche 16) சிறுகோளை (asteroid) நோக்கி ஒரு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

இதன் ஒரு கட்டமாக இந்த விண்கலத்திற்கு Psyche என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த சிறுகோள் செவ்வாய் (Mars) கிரகத்திற்கும் வியாழனுக்கும் (Jupiter) இடையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சைக் விண்கலம் ஆழமான விண்வெளி ஆப்டிகல் தகவல் தொடர்பு அமைப்புடன் (deep space optical communications system) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லேசர் தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த லேசர் தொடர்பு தற்போதுள்ள ரேடியோ அலைகளை விட வேகமாக செல்லும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சைக் விண்கலத்தின் லேசர் தகவல்தொடர்புகள் சுமார் 140 மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து தரவுகளை அனுப்பியது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.

இந்த லேசர் தரவுகள் குறித்து பேசிய திட்ட செயல்பாடுகளின் தலைவர் மீரா சீனிவாசன், ஏப்ரல் 8-ஆம் திகதி 10 நிமிட லேசர் தரவு இணைக்கப்பட்டதை அவர் வெளிப்படுத்தினார்.

தற்போதுள்ள பாரம்பரிய முறைகளை விட லேசர் தகவல் தொடர்பு சிறப்பாக செயல்படுகிறதா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். சைக் விண்கலம் 25 Mbps வேகத்தில் தரவுகளை அனுப்புவது கண்டறியப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்