மகள்களை திருமணம் செய்துகொள்ளும் அப்பாக்கள்: என்ன காரணம்?
3 வைகாசி 2024 வெள்ளி 09:04 | பார்வைகள் : 907
மண்டி எனும் பழங்குடியின மக்கள் அவர்களது இனத்தில் இருக்கும் பெண் குழந்தைகளை அவர்களின் அப்பாக்கள் திருமணம் செய்யும் மரபு காணப்படுகின்றது.
திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு முறையாகும். இந்த வழக்கம் தந்தை மகள், சகோதர, சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை.
ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும், தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம் ஏற்படுகின்ற நிகழ்வுகள் சில இடங்களல் இருக்கின்றன.
மண்டி என்ற பழங்குடியின மக்கள் நாடெங்கிலும் உள்ள பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த இன மக்களிடையே தந்தை மகள் திருமணம் செய்யும் கலாச்சாரம் மேலோங்கி உள்ளது.
இதற்கான காரணம் இந்த இனத்தை சோந்த பெண் கணவரை இழந்து கம்பெண்ணாக இருந்தால் அதை இனத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் அந்தப் பெண்ணை மறுமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால், அந்த குழந்தையை இவர்கள் தன்னுடைய குழந்தையாக கருதுவதில்லை.
அந்தப் பெண் குழந்தை வளர்ந்து பருவம் எய்தியதும் அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் மண்டி இன ஆண்களிடம் காணப்பட்டது.
இதவரை அந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்த நபர் கணவராக மாறுகிறார். இதற்கு சம்மதித்தால் மட்டுமே பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்வார்களாம். இது தற்போது வரை நடந்து கொண்டு தான் வருகிறது.