தொடருந்து பாதுகாவலர்களுக்கு வாள் வெட்டு! - துப்பாக்கிச்சூடு!

3 வைகாசி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 10421
தொடருந்து பாதுகாவலகளை வாளால் வெட்டிய ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SNCF நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு காவலாளிகள் மெற்றோ நிலையம் ஒன்றின் அருகே வாகனம் ஒன்றில் இருந்த வேளையில், ஆயுததாரி ஒருவர் அவர்களை நோக்கி வாள் ஒன்றினால் தாக்கியுள்ளனர்.
வாகனத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார். அவர்கள் நால்வரும் காயமடைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கியால் ஆயுததாரியை சுட்டுள்ளனர். இதில் ஆயுததாரி காயமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஊழியர்களுக்கு மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்கள் மது அருந்தியிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுததாரி யார், அவரின் நோக்கம் குறித்த விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1