கென்யாவில் கனமழை - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...!
3 வைகாசி 2024 வெள்ளி 12:42 | பார்வைகள் : 2346
கென்யாவில் கனமழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யா கனமழையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளிலும் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.
அத்துடன் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைரோபியில் உள்ள பழமையான அணையான கிஜாப் சேதமடைந்து, அதன் தடுப்புச்சுவர் இடிந்தது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.