Paristamil Navigation Paristamil advert login

காசாவில் போர்நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலுக்கு வர்த்தக நிறுத்தம் 

 காசாவில் போர்நிறுத்தம் வரும் வரை இஸ்ரேலுக்கு வர்த்தக நிறுத்தம் 

3 வைகாசி 2024 வெள்ளி 12:43 | பார்வைகள் : 2259


துருக்கி நாடு இஸ்ரேலுடனான வர்த்தக நிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

இஸ்ரேலுடனான ஆண்டுக்கு 7 பில்லியன் டொலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மீண்டும் தொடங்காது என துருக்கி கூறியது.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் உறுதி செய்யப்படும் வரை இது தொடரும் என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கியின் வர்த்தக அமைச்சர் ஓமர் போலட் இதனை அறிவித்தார். 

இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனப் பகுதிகளில் மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பேரிடரை மேற்கோள் காட்டி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை நிறுத்தியது. 

துருக்கியின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ''இஸ்ரேலின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான துறைமுகங்களைத் தடுப்பதன் மூலம் ஒப்பந்தங்களை துருக்கி மீறுகிறது.

இது ஒரு சர்வாதிகார அணுகுமுறை. 

இஸ்ரேல் வலுவான மற்றும் தைரியமான பொருளாதாரத்துடன் வெளிப்படும்'' என தெரிவித்துள்ளார்.      
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்