Paristamil Navigation Paristamil advert login

செல்வராகவன் இயக்கத்தில் அஜித், தனுஷ்....?

செல்வராகவன் இயக்கத்தில்  அஜித், தனுஷ்....?

18 ஆவணி 2023 வெள்ளி 12:39 | பார்வைகள் : 2133


சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தவர் பரத் என்பது அனைவரும் அறிந்ததே. லவ் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்பொழுது, தன்னை இத்தனை ஆண்டுகளாக கைவிடாமல் உத்வேகம் அளித்து வந்த தனது ரசிகர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துவதாக கண்கலங்கி பேசியது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்தவரும் பரத் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வ ராகவனுடைய இயக்கத்தில் தல அஜித் மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த ஒரு திரைப்படத்தில் அவரும் நடிக்க ஒப்பந்தமானதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் சில காலங்களுக்கு பிறகு அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் சென்றது என்றும் அந்த படம் தனக்கு கிடைத்திருந்தால் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அது ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் தல அஜித் மற்றும் தனுஷ் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் நடிகர் பரத்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்