இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம் - மாணவர் அமைப்புக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பு
3 வைகாசி 2024 வெள்ளி 12:47 | பார்வைகள் : 2185
பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி மாணவர் அமைப்புக்கு பெருந்தொகை அபராதம் விதித்துள்ளது அயர்லாந்தின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
அயர்லாந்தின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான Trinity College Dublin நிர்வாகம், சமீபத்திய ஆர்ப்பாட்டங்களால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,
மாணவர் அமைப்பு மீது அபராதம் விதித்திக்கப்பட்டுள்ளது.
காஸாவில் முன்னெடுக்கப்படும் போர் குறித்த பல்கலைக்கழகத்தின் பார்வை மற்றும் முன்மொழியப்பட்ட கல்வி கட்டண உயர்வு, அதிகரித்துள்ள விடுதிக் கட்டணம் உள்ளிட்டவையை குறிப்பிட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், மாணவர் அமைப்பின் தலைவர் László Molnárfi தெரிவிக்கையில் நிஜமான கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் Trinity College Dublin நிர்வாகம் மாணவர்கள் அமைப்புக்கு 183,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 2,000 மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர்.
பிரித்தானியாவில் லண்டன், மான்செஸ்டர், நியூகேஸில் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.