Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரகத்தில்  கனமழை..! எச்சரிக்கை விடுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில்  கனமழை..! எச்சரிக்கை விடுப்பு

3 வைகாசி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 9791


ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனமழையுடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால், ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்