Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

3 வைகாசி 2024 வெள்ளி 16:51 | பார்வைகள் : 1536


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 292 ரூபாய் 12 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 68 சதமாகக் காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 90 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 35 சதமாகக் காணப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்