ஈருருளியை மோதிய நிதியமைச்சரின் சிற்றுந்து!!
4 வைகாசி 2024 சனி 05:59 | பார்வைகள் : 3391
நிதியமைச்சரின் சிற்றுந்து ஒரு உந்துருளியை மோதி உள்ளது.
நேற்று மாலை பிரான்சின் நிதியமைச்சர் புரூனோ லு மேயர் (BRUNO LE MAIRE) தனது பணியை முடித்து விட்டு தனது சொந்தச் சிற்றுந்தில் வீடு திரும்பி உள்ளார். இவர் வீடு திரும்பும் வழியில் பரிசின் 6வது பிராந்தியத்தில் 19h30 மணியளவில் ஒரு சந்தியில் ஈருருளிச் சாரதி ஒருவரை மோதி உள்ளார்.
இந்த ஈருருளிச் சாரதி வீதி சமிக்ஞையை மதிக்காது, அவரிற்கு சிவப்பு விளக்காக இருந்த நிலையில், ஒரு சந்தியைக் கடக்க முயன்றமையாலேயே இந்த விபத்து நடந்துள்ளது. ஈருருளிச் சாதியின் விதி மீறலே விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
தலையில் அடிபட்ட நிலையில் ஈருருளிச் சாரதி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு வந்த காவற்துறையினர, அனைத்து விபத்து நடவடிக்கை போல், நிதியமைச்சரிடம் அவர், மதுபோதை மற்றும் போதைப்பொருள் உட்கொண்டுள்ளாரா என்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் நிதியமைச்சர் இது எதனையும் உட்கொள்ளவில்லை என்பதனால், அவர் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.