மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி?
18 ஆவணி 2023 வெள்ளி 12:45 | பார்வைகள் : 8305
ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அனேகமாக இந்த படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை புச்சிபாபு சனா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது இயக்கத்தில் உருவான ’உப்பென்னா’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் தேஜா தற்போது ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் புச்சி பாபு சனா படத்தின் படப்பிடிப்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan