Paristamil Navigation Paristamil advert login

'ஜவான்' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் ?

'ஜவான்' புரமோஷன் நிகழ்ச்சியில்   கலந்து கொள்கிறாரா விஜய் ?

18 ஆவணி 2023 வெள்ளி 12:54 | பார்வைகள் : 1103


ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் படக்குழுவினர்களோடு சிறப்பு விருந்தினராக தளபதி விஜய் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ’ஜவான்’ திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மேலும் ’ஜவான்’ ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது டிரைலர் ரெடியாகி விட்டதாகவும் விரைவில் இந்த ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் மற்றும் சஞ்சய்தத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்