Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளை தனி அறையில் படுக்க வைக்க எந்த வயது பொருத்தமானது?

 குழந்தைகளை தனி அறையில் படுக்க வைக்க எந்த வயது பொருத்தமானது?

4 வைகாசி 2024 சனி 11:08 | பார்வைகள் : 1809


குழந்தை பிறந்தது முதல் அது அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாகி விடுகிறது. பிறந்தது முதல் குழந்தைகள் பெரும்பாலும் தனது தாயின் அரவணைப்பிலேயே தூங்கிப் பழக்கப்பட்டிருக்கும்.

ஆனாலும், எந்த வயது வரை குழந்தையை தங்களது அரவணைப்பில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பெற்றோர்கள் பலருக்கும் இருக்கிறது.இது தொடர்பான சரியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்களது குழந்தைகளுக்கு எந்த வயதில் தனி அறை கொடுத்து உறங்க வைக்கலாம் என்பது தொடர்பில் இன்றைய கால பெற்றோர்களிடைய பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது. 

குழந்தைப் பருவத்தில், பெற்றோரின் அரவணைப்பு மிகவும் முக்கியம். எனவே குழந்தைகள் பெற்றோருடன் தூங்குவது சிறந்தது.

ஆனால் குழந்தைகள் வளரும் போது குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவர்களை தனியாக தூங்குவதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.

சில பெற்றோர் குழந்தைகள் தனியாக தூங்க விரும்பினாலும் கூட அதனை அனுமதிக்க மறுக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல்.


இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு எப்போதும் பெற்றோரின் துணை தேவைப்படும்.அவர்களால் தனித்து இயங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. 

தனியாக தூங்க பயப்படும் குழந்தைகளை ஒருபோதும் வற்புறுத்த கூடாது. மாறாக இவர்களை குறைந்த பட்சம்  வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தனியாக தூங்க பழக்கப்படுத்த வேண்டும். 

இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்கள் தனியாக தூங்குவதற்கு சிறிது பழகிக் கொள்வார்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் பல் துலக்கவும் நைட் டிரெஸ் போட்டு கொள்ளவும் கட்டாயம் பழக்கப்படுத்த வேண்டும்.

இது சிறந்த தூக்கத்துக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.இரவில் குழந்தைகளின் அருகில் அமர்ந்து கதைகூறி தூங்க வைப்பதன் மூலம் குழந்தைகள் விரைவாக தனியாக தூங்குவதற்கு பழகிக்கொள்வார்கள்.

பொதுவாக, எட்டு வயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏழு வயது முற்றாக முடியும் வரை அவர்கள் மனதளவில் குழந்தைதான்.இந்த வயதிற்கு பின்னர் குழந்தைகள் பெரியவர்களாக தொடங்குகிறார்கள். எதனையும் சமாளிக்கும் திறனும் வளர ஆரம்பிக்கின்றது.

எட்டு வயது ஆரம்பிக்கும் போது குழந்தைகளை தனியறையில் தூக்க வைப்பது இவர்களின் உள ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே பெற்றோர்கள் இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்