Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்தில் தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்  கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்  கண்டுபிடிப்பு

4 வைகாசி 2024 சனி 11:30 | பார்வைகள் : 3088


இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் .

இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த ஆய்வில், ரோமானிய காலகட்டத்தைச் சேர்ந்த குளியல் அறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது அபூர்வ ஊதா நிறப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானிய நிலவியல் அமைப்புடன் இணைந்து பல்வேறு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பொருள், டைரியன் ஊதா (Tyrian Purple) என கண்டறியப்பட்டது. 

இந்த டைரியன் ஊதா, ரோமானியப் பேரரசின் ஏகாதிபத்திய நீதிமன்றத்துடன் தொடர்புடைய நிறமாகும்.

இந்த நிறமியானது மத்திய தரைக்கடல், வட ஆப்பிரிக்கா மற்றும் மொராக்கோவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

அதை தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால், அந்த காலகட்டத்தில் இந்த டைரியன் ஊதா, தங்கத்தை விட அதிக மதிப்புடையதாக இருந்துள்ளது.

இது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த அரிய நிறமி, எகிப்தின் ரோமானிய மாகாணத்திலுள்ள சுவர் ஓவியங்களிலும், சில உயர் அந்தஸ்துகொண்டோரின் சவப்பெட்டிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்