Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

19 ஆவணி 2023 சனி 02:44 | பார்வைகள் : 7508


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் வெளியேற முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று இரவு இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UK 132 இல் பயணிப்பதற்காக வந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் சந்தேகமடைந்த இலங்கை சுங்க பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை சோதனையிட்டுள்ளனர்.

அங்கு சந்தேகநபரின் உடலில் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் அடங்கிய 3 பைகளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த தங்கத்தின் மொத்த எடை 1.28 கிலோ எனவும் அதற்குள் தங்க ஜெல்களும் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மொஹமட் சிஹாப் நபுஹன் என்ற நபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்