Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் ஒரு பகுதியில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

இலங்கையின் ஒரு பகுதியில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை

19 ஆவணி 2023 சனி 06:52 | பார்வைகள் : 3008


பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அண்டியுள்ள பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

பட்டங்களை பறக்கவிடுகின்றமை மின்சார விநியோகத்திற்கு இடையூறாக உள்ளதாக குறித்த திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பொறியியலாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2027 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்பிற்கு ஆயிரத்து 20 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் திறன் கொண்ட 7 புதிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பணியை துரிதப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்