பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைக்கு அருகில் நிறையும் இருக்கவேண்டும். அரசு
5 வைகாசி 2024 ஞாயிறு 07:05 | பார்வைகள் : 2017
பிரான்சில் இன்று (04/05) வெளியான அரச வர்த்தமானி அறிவித்தலில், பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைக்கு அருகில் அதன் நிறையும், வாடிக்கையாளர்களின் கண்களில் தெளிவாக தெரியும் வகையில் குறிப்பிட பட்டு இருக்கவேண்டும் எனும் அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
விலையை தெளிவாகவும், நிறையை தெளிவின்றியோ அல்லது மறைத்தோ இருந்தால் சிறிய நிறுவனங்களுக்கு 3,000€ யூரோக்கள் அபராதமும், பெரும் நிறுவனங்களுக்கு 15,000€ யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த நடைமுறை எதிர்வரும் யூன் 1ம் திகதி முதல் அமூலுக்கு வரும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தல் மேலும் தெரிவித்துள்ளது.
காரணம் பொருட்களின் விலை அதிகரிக்கும் பொழுது விலையை அதிகரித்தது போல் காட்டாமல், குறித்த பொருளின் நிறைய குறைத்து அதே விலையில் விற்கும் நடைமுறை இருந்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ சர்க்கரை பொதியின் விலை இரண்டு யூரோக்களில் இருந்து இரண்டரை யூரோக்களாக அதிகரிக்கும் போது அந்த பொதியில் 800 கிராம் சக்கரையை பொதியம் பண்ணி இரண்டு யூரோக்களுக்கே விற்பனை செய்வதாகும்.